தமிழ் சினிமாவில் தானே இயக்கி தானே நடித்து வரும் நடிகராக விளங்கும் நடிகர் தான் ராகவா லாரன்ஸ். இவர் தற்பொழுது பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இது ஒரு புறம் இருக்க இவர் தனது தம்பியான எல்வினை கதாநாயகனாக ஆக்கும் முயற்சியில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார். அதையடுத்து இப்போது கமர்ஷியல் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் லாரன்ஸும் ஒரு முக்கியக் கதாபத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வடிவேலுவை அனுகியுள்ளனர். ஆனால் வடிவேலு 5 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதனால் அவர் கேட்ட சம்பளம் மிக அதிகமாக இருந்ததால் தயாரிப்பு தரப்பு தயங்கவே, அந்த படத்தில் இருந்து விலகியுள்ளாராம் .
அத்தோடு இவருக்கு பதிலாக யோகிபாபுவை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு கருதினார்களாம். இருப்பினும் இந்தக் கதாப்பாத்திரம் வடிவேலுவுக்கு தான் சரியாக இருக்கும் என்ற காரணத்தால் வடிவேலுவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த படத்தின் தயாரிப்பு தரப்பும் மாறி பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
Listen News!