சில ஆண்டுகளுக்கு முதல் பெரும்பாலான படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயினைத் தாண்டி காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.அப்படி தமிழ் சினிமாவை பல காமெடி நடிகர்கள் ஆட்சி செய்து வந்தனர்.அந்த வரிசையில் முக்கியமானவர் தான் காமெடி நடிகர் வடிவேலு.
இவர் தன்னுடைய நகைச்சுவை நடிப்பினால் ரசிகர்களை சிந்திக்க வைப்பதோடு சிரிக்கவும் வைப்பார்.அப்படி வடிவேலுவின் காமெடி வசனங்கள் எத்தனை யோ ரசிகர்களை கவர்ந்தாலும்,அதில் ஒரு காமெடி காட் சி மட்டும் தான் இன்று வரை ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது .அந்த வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வாத்தியார்.
இந்த படத்தில் வடிவேலுக்காகவே ஒரு காமெடி ட்ராக்கை வைத்திருப்பார்கள்.அதில் வடிவேலுவை பார்த்து சிங்கமுத்து ”நீ அதற்கு சரிப்பட்டு வர மாட்ட” என் று கூ று வார் .ஆனால் ”எதற்கு சரிப்பட்டு வரமாட் டார் ”என்று கடைசி வரை கூறவே மா ட் டார்.இதனால் நான் எதற்கு டா சரிப்பட்டு வரமாட்டேன் என்று வடிவேலுவும் குழம்பிவிடுவார் .
இந் நிலையில் இந்த படத்தின் இயக்குநரான வெங்கடேஷிடம் இது பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர் .அதற்கு அவர் கூறியதாவது ,இந்த காட்சியை படமாக எடுக்கும் போது திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது .அது என்னவென்றால் அ வர் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று கடைசிவரை சொல்லாமலேயே விட்டுவிடலாம் என்று,எண்ணி னேன் .
இதை வடிவேலு சாரிடமும் கூறினேன் .ஆனால் அவர் இது சரியாக வருமா என்று என்னிடம் கேட்டா ர் .ஆனால் நான் இதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறினேன் . அப்படி இருந்தும் கூட அரை மனதோடு தான் அந்த காட்சியில் நடித்தார் வ டிவேலு .பி ன்னர் காமெடி காட்சி வெளி யாகி,சூப்ப ர் ஹிட் அடித்தது . ஆனால் அவர் எதற்கு சரிப்பட்டு வர மாட் டார் என்று இன்று வரை கூறவில்லை இயக்குநர் ஏ. வெ ங்கடேஷ். காரணம் அந்த விஷயத்தை அவர் கூறி விட்டால் அந்த காமெடி காட்சிக்கு இருக்கும் அந்தஸ்து குறைந்து விடுமாம்…என்றும் கூறியுள்ளார்.
Listen News!