• Sep 21 2024

தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வைகைப்புயல் வடிவேலு- அடடே அதுக்குள்ளே இத்தனை வயது ஆகி விட்டதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் வைகைப்புயல் வடிவேலு இன்றைய தினம் தனது 62-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பது முக்கியமாகும்.

ஆரம்பகாலங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் வடிவேலு. இவர்  1985-ம் டி.ராஜேந்திரன் நடிப்பில் வெளியான  என் தங்கை கல்யாணி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். இதனைத் தொடர்ந்து ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படத்தில் கவுண்டமனி உடன் சேர்ந்து அவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களைக் கவரை்ந்திருந்தன.


ஒல்லியான கிராமத்து இளைஞனாக வடிவேலு படங்களில் தோன்றினாலும், அவரது டைமிங் வசனங்கள் பிரதான இடத்தைப் பிடித்து காமெடியை மெருகேற்றும். அவரது நகைச்சுவைக்கு இன்றும் தனித்து நிற்பதற்கு காரணம் அவரது உடல்மொழி. அவரின் உடல்மொழியும், எக்ஸ்பிரஷன்களும் தான் இன்று மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டு வருகிறது.

பல திரைப்படங்களில் நடித்து காமெடியில் முன்னணியில் வலம் வந்த இவருக்கு சில காலம் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் நடிக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.அத்தோட இன்றைய தினம் இவர் தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.


இதனால் இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். என்பதும் முக்கியமாகும். மேலும் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement