• Nov 14 2024

அதிமுக மற்றும் திமுகாவை ஓபனாக விமர்சிக்கும் வைரமுத்து! அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாடல்கள் என்பது அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் ஒன்றாக காணப்படுகின்றது. அவ்வாறு தமிழ் சினிமாவின் ஒவ்வொரு பாடல் வரிகளையும் இந்திய அளவில் பிரபலமாக்கிய பாடலாசிரியர் வைரமுத்து ஆவார்.


இன்றளவிலும் இவரது பாடல் வரிகளுக்கென்று தனி ரசிகர்கள் உள்ளது. இவரது பாடலில் தமிழை தவிர வேறு மொழிகளே இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே சமீபத்தில் இவர் தனது x தல பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவொன்றை போட்டுள்ளார்.


அதில் " கலைஞருக்கும், அ.இ.அ.தி.முகவிலிருந்து தி.மு.கவில் வந்துசேர்ந்த ஒரு முக்கியப் புள்ளிக்கும் நடந்த உரையாடல் எனக்கு வாய்மொழியாக வந்தது; தயக்கத்தோடு கலைஞரையே கேட்டு உறுதி செய்ததுசொற்கள் மாறியிருக்கலாம் சொன்னபொருள் இதுதான் வைரமுத்த ரொம்ப நம்பாதீங்க தலைவரே! ஏன்? எதனால?’ அவரு உங்களப் புகழ்ந்து பேசுறாரே தவிர ஜெயலலிதாவ எப்பவும் திட்ட மாட்டேங்குறாரு’(கலைஞர்சிறு சிந்தனைக்குப் பிறகு) நீ அங்க இருந்து இங்க வந்திருக்க அங்க இருந்தபோது என்னத் திட்டுன இங்க இருந்து அந்த அம்மாவத் திட்டுற வைரமுத்து எப்பவும் இடம் மாறல ஜெயலலிதா வைரமுத்துக்கு எதிரியும் இல்ல அவரு தமிழுக்காக நம்மகூட நிக்கிறாரு இன்னொண்ணு அவரு யாரையும் திட்டமாட்டாரு அது அவரு இயல்பு கோள் சொன்னவர் குறுகிப்போனார் இப்படித்தான் கேடுகள் ஈட்டி எறியும்போதெல்லாம் கேடயமாவது சத்தியம்" என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement