தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக பாடலாசிரியர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் வைரமுத்து. அதிலும் குறிப்பாக இளையராஜா இசையில் வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாயின. அதுமட்டுமல்லாது வைரமுத்து அவர்கள் ஏராளமான விருதுகளையும் வாரிக் குவித்துள்ளார்.
இவர் அன்றும் சரி, இன்றும் சரி சினிமா பிரபலங்களின் பிறந்த நாள், நினைவு நாள் போன்றவற்றின் போது அவர்களை வாழ்த்தவும் நினைவு கூறவும் தவறுவதில்லை. அதேபோன்று சமூக கருத்துக்கள் பலவற்றையும் கவிதைகளாகப் பதிவிட்டு வருவார்.
அந்தவகையில் தற்போது உழவர்களை மையமாகக் கொண்டு கவிதை வரிகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இந்தக் கவிதையானது ரசிகர்கள் பலரதும் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அது
நிலக்கரி வெட்டும் சுரங்கமல்ல
வேளாண் மண்டலங்களைப்
புதைக்கத் தோண்டும் படுகுழி
கண்களை விற்றுக்
கண்ணாடி வாங்கும்
'அறிவாளி'களின் ஆடம்பரம்
தேசத்தைக்
கூட்டாண்மைகள்
'நாட்டாமை' செய்யக்கூடாது
இலக்கியம் சமூகம்
இரண்டும்
உழவர் பக்கமே இருக்கும்
Listen News!