கவிஞர் வைரமுத்து ஐயா அவர்கள் ஒரு தமிழ்வாணன் ஆவார். இவர் போதைபொருளிற்கு எதிரான கையொப்பம் இட்டுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "போதைக்கு எதிரான ஒருகோடிக் கையொப்பங்களுள் என்னுடையதும் ஒன்று, முன்னெடுத்துச் செல்லும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்புக்குப் பாராட்டு. போதை என்பது விலைக்கு வாங்கும் தற்கொலை நாம் நாமாக இருக்கும் வரைதான் நமக்கும் நாட்டுக்கும் நல்லது". இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பதிவிற்கு பலரும் பலவிதமாக விமர்சனம் செய்துள்ளனர். "ஒரு பக்கம் போதை ஒழிப்பிற்கு கையொப்பம் இட்டுள்ளீர்கள், மறு பக்கம் டாஸ்மாக் ஓபன் செய்து விட்டு இருக்கும் ஜனநாயகம். டாஸ்மாக் ஓபன் செய்தவர்களையே இந்த கூட்டத்தில் இணைத்துள்ளீர்கள் இது என்ன நியாயம்" என்று பதிவிட்டிருந்தார்கள்.
மேலும் "போதைக்கு எதிராக கையொப்பமிடமாட்டேன். அது அறிவுடைமை ஆகாது, விபத்து நடக்கிறது என்பதற்காக வாகனங்களை ஒழித்து விடலாமா? அப்படியே ஒழித்து விட்டாலும், பயன்படுத்துவதற்கும், பாழ்படுத்துவதற்கும் வேறுபாடு தெரியாத மூளைகளை வைத்து என்ன செய்வது? இவ்வாறும் விமர்சனம் எழுந்துள்ளது".
இதற்கு ஒருவர் நம் தாய் தமிழ் நாடு போதையற்ற மாநிலமாக திகழ வேண்டும், போதைக்கு எதிராக இந்த கூட்டம் செய்யும் செயல் நிச்சயம் வெற்றி பெரும் ஐயாவிற்கு அன்பும், நன்றியும் என்று பதிவிட்டிருந்தார்.
Listen News!