• Nov 19 2024

நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை- பாரதி ராஜாவை மருத்துவமனையில் சென்று பார்த்த வைரமுத்து

stella / 2 years ago

Advertisement

Listen News!

16 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த இயக்குநராக அறிமுகமாகியிருந்தவர் பாரதிராஜா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்ட இவர் மண் வாசனை கலந்த படங்களை எடுத்து மனதை ஈர்த்தவர்.

ஆறு தேசிய திரைப்பட விருதுகளையும், இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது என பல விருதுகளை தன் வாழ்நாளில் குவித்துள்ளார். பிரபல இயக்குநர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படம் இயக்கியுள்ளார்.

மேலும் சமீபகாலமாக பல திரைப்படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் ஈஸ்வரன் நம்ம வீட்டுப் பிள்ளை திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


இந்த நிலையில் கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வகையில் தற்பொழுது பாரதிராஜாவை மருத்துவமனையில் சென்று பார்த்தேன் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதிராஜாவை பார்த்ததை கவிதை வடிவில் கூறியுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

பாரதிராஜாமருத்துவமனையில்பாரதிராஜாவைப் பார்த்தேன்நலிந்த நிலையிலும்நகைச்சுவை தீரவில்லைசின்னச் சின்னப்பின்னடைவுகளைச் சீர்செய்யசுத்த மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள்அல்லி நகரத்தைடில்லி நகரத்திற்குஅழைத்துச் சென்றமகா கலைஞன்விரைவில்மீண்டு வருவார் கலையுலகை ஆண்டு வருவார் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement