தமிழ் சினிமாவில் உள்ள கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர் கவிப்பேரரசு வைரமுத்து. வைரமுத்து தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காலகட்டங்களில் அவரது பாடல் வரிகளுக்கென்று ஒரு ரசிக பட்டாளமே இருந்தது. இதனாலேயே அவரும் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வந்தார்.
வைரமுத்து முதன்முதலாக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது பாடல்கள் அனைத்தும் பெரும் ஹிட் கொடுத்தன. கிழக்குச் சீமையிலே திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ் தானு தயாரித்தார். அந்தப் படத்தில் பாடல் வரிகளை வைரமுத்துதான் எழுதினார். நிழல்கள் திரைப்படத்திற்கு பிறகு பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களுக்கெல்லாம் வைரமுத்துதான் பாடல் வரிகள் எழுதி வந்தார்.
கிழக்குச் சீமையிலே திரைப்படத்திற்கு பிறகு வைரமுத்துவிற்கும் தயாரிப்பாளர் எஸ் தானுவிற்கும் நல்ல நட்பு உருவானது. பல வருடங்களாக இவர்களுக்கு இடையே இந்த நட்பு நீடித்து வந்தது.ஆனால் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கபாலி திரைப்படத்தால் அவர்கள் இருவரிடையே இருந்த நட்பில் விரிசல் ஏற்பட்டது. கபாலி திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானுதான் தயாரித்தார்.
அந்தப் படத்திற்கு அதிகமான முதலீட்டைப் போட்டிருந்ததால் படம் பெரும் வெற்றி அடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பில் இருந்தார் தானு. கபாலி வெளியான அன்றே நல்லவிதமான வரவேற்புகளைதான் பெற்றது. ஆனால் அந்த சமயத்தில் ஒரு மேடையில் பேசிய வைரமுத்து கபாலி படம் படுதோல்வி அடைந்துள்ளது என பேசி இருந்தார்.
Listen News!