• Sep 20 2024

நடிகரை அடித்த வாணி போஜன்..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பரத், தனது 50-வது படமான லவ் படத்தில் வாணி போஜனுடன் நடிக்கின்றார்.

நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் கூட்டணியில் மிரள் படம் தற்போது வெளியாகிய நிலையில், மீண்டும் இருவரும் லவ் என்ற படத்தில் இணைந்துள்ளார்கள்.


மலையாளத்தில் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற லவ் படத்தை தமிழில் ரீமேக் செய்து தயாரித்து இயக்கியுள்ளார் ஆர்.பி.பாலா. மேலும் இப்படத்தில் விவேக் பிரசன்னா, ராதா ரவி மற்றும் டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

எனினும் தற்போது லவ் படத்திப் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீசரை காதல் ஜோடியான ஆர்யா, சாயிஷா இனைந்து வெளியிட்டனர். கொலையை செய்துவிட்டு அதை மறைக்க பரத் செய்யும் விசயங்கள் விறுவிறுப்புடன் டீசரில் காட்டி உள்ளனர். அவித்தியாசமாக உள்ளதனால் இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய வாணி போஜன், "படத்தின் சண்டை கட்சியின் போது நடிகர் பரத்தை கடுமையாக அடித்துள்ளேன், அவரும் என்னை திருப்பி அடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்காக இருவரும் மிகவும் கடுமையாக உழைத்துள்ளோம்" என்று தெரிவித்தார். 


Advertisement

Advertisement