தனது மிகவும் இனிமையான குரல்கள் மூலம் பல பாடல்களை பாடி ஏரளாமான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்தவர் வாணி ஜெயராம்.தமிழில் 1973 ஆம் ஆண்டு வெளியான "தாயும் சேயும்" என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக பிரபலமானவர் வாணி ஜெயராம். மொத்தம் 19 மொழிகளில் சுமார் 10,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள வாணி, தமிழில் மட்டும் சுமார் 1500 பாடல்கள் வரை பாடி உள்ளார்.
மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம் உள்ளிட்ட பாடல்களை கேட்கும் போது பலரும் வாணி ஜெயராம் குரலில் சொக்கி போய் விடுவார்கள்.மேலும் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் பாடியதற்காக தேசிய விருதையும் வென்றிருந்தார் வாணி. தமிழில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்திலும் பாடல் பாடி இருந்த வாணி ஜெயராமனுக்கு கடந்த குடியரசு தின விழாவின் போது பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வாணி ஜெயராம் (78) கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இசை உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நடத்திய வாணி ஜெயராமின் மறைவு, அவரது ரசிங்கர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரையும் கண்ணீரில் நனைய வைத்துள்ளது.
மேலும் இவர் இருந்த வீட்டிற்குள் தடயவியல் நிபுணர்கள் இறங்கி தடயங்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டதோடு வாணி ஜெயராமின் உடற்கூறாய்வு முடிந்து இவரின் உடல் நுங்கம் பக்கத்தில் உள்ள அவரின் இல்லத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த தகவல் தெரியவந்ததுமே, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு அஞ்சலி செலுத்துவதற்காக குவிந்து விட்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!