தமிழ் சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது பிரபல காமெடி நடிகர் இறந்த விட்டதாக கூறப்படுகின்றது.
அதன்படி வெண்ணிலா கபடிக்குழு நான் மகான் அல்ல குள்ள நரிக் கூட்டம் ஆகிய திரைப்படங்களில் காமெடியனாகவும் துணை நடிகராகவும் நடித்திருப்பவர் தான் நடிகர் ஹரிவைரவன்.
மதுரையைச் சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவரது இறுதிச் சடங்கு மதுரையில் நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது.இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!