தமிழ்த்திரையுலகில் நடிகை வனிதா விஜயகுமார் அவர்களை தெரியாதவர்களே இல்லை எனலாம். தற்போது அவருடைய மகளும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார்.
பிக்பாஸ் சீசன் 7இல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுள் ஒருவராக உள்ளவர் தான் ஜோவிகா விஜயகுமார். இவரும் அம்மா போலவே துடிதுடிப்பாக செயற்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் தன் மகள் ஜோவிகாவுக்கு பார்த்து பார்த்து ஆடைகளை வடிவமைத்து அனுப்பியுள்ளர் அம்மாவான வனிதா விஜயகுமார்.
பிக்பாஸ் ஆரம்பத்திலேயே தனக்கு படிப்பு வரவில்லை என்பதால், ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் நின்று விட்டேன் என ஜோதிகா தெரிவித்திருந்தார். அத்துடன் நடிப்பில் ஆர்வம் இருந்ததால் டிப்ளமோ படித்து முடித்துள்ளேன் எனவும் கூறியிருந்தார்.இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் எழுந்த சர்ச்சைகளை தைரியமாக எதிர்கொண்டார் ஜோவிகா.
இவ்வாறான நிலையில், பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வரும் மகள் ஜோவிகாவுக்கு, அவர் அணியும் அத்தனை உடையும் வனிதா தான் ஃபேஷன் டிசைன் செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!