2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. ஏனைய சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் மக்களுக்கு பரீட்சியமான பலரும், திரைப்படம் மற்றும் கலைத்துறையில் வளர்ந்து வரும் ஒரு சிலரும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
அந்தவகையில் மொத்தம் 18 பேர் இந்த சீசனின் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். அதிலும் நடிகர் கூல் சுரேஷ் முதல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்தது ரசிகர்களுக்கு உச்ச கட்ட சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. இதனால் இனிமேல் பிக்பாஸ் ஷோவில் சுவாரஷ்யத்துக்கு பஞ்சம் இருக்காது எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான வனிதா பிக்பாஸ்-7 குறித்துப் பல விடயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூல் சுரேஷ் பற்றிக் கூறுகையில் "கூல் சுரேஷ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய ஒரு நபர், ஒரு சிலர் உதாரணமாக யூடியூபர்ஸ் பண்ணுற ஒரு வீடியோவோ அல்லது நிகழ்ச்சி மூலமாகவோ அவர்களுக்கு புகழ் கிடைக்கின்றது, அவர்களுக்கென்று ஒரு பான் பேஜ் உருவாகிறது.
அதேமாதிரித்தான் கூல் சுரேஷ் நடிகர் சிம்புவின் பான் ஆக இருந்து, அதிலிருந்து ஆரம்பித்து ஒரு பஞ்ச் டயலாக் எல்லாம் சொல்லி, பின்னர் சிம்புவுடைய பான்ஸ் இவருக்கு சப்போர்ட் பண்ணி அதன் மூலமாக பெரிய ஒரு வளர்ச்சி அடைந்திருக்கார். அதுக்கு ஒரு பெரிய திறமை வேண்டும். இந்த அளவிற்கு சாதாரணமான கூல் சுரேஷ் எல்லாருக்கும் தெரியிற அளவிற்கு பிரபலமாகி இருக்கின்றார் என்றால் அது ஒரு நல்ல வளர்ச்சி தான்" என்றார்.
மேலும் "சமீபத்தில் ஒரு ஆடியோ லான்ச்சில் ஆங்கர் கழுத்தில் திடீரென வந்து மாலை போட்டிருக்கார், இது எதுக்குப் பண்ணினார் என்றே புரியல, வேணும் என்று பண்ணினாரோ இல்லை ஆர்வக் கோளாறில் பண்ணினாரோ அது எனக்குத் தெரியல, இந்த விதத்தில் வச்சுப் பார்க்கும் போது பிக்பாஸ் 7இல் ஏழரையை முதலிலேயே இறக்கி இருக்காங்க என்றுதான் சொல்ல வேண்டும்
ஒவ்வொரு சீசனிலும் ஒரு ஏழரையை போடுவாங்க, அந்தவகையில் இந்த சீசனில் ஏழரை கூல் சுரேஷ் தான், அவர் பண்ணுறது எல்லாமே இன்னேசென்ற் ஆகப் பண்ணல, தனக்குன்னு ஒரு ஸ்டார்ஜி வச்சு தான் பண்ணுறார், இவரை பார்க்கும் போது ஜிபி முத்து ஞாபகம் வருது, ஆனால் ஜிபி முத்துவை ஏழரை என்று சொல்ல முடியாது, அவர் ஒரு நல்ல மனுஷன்" எனவும் தெரிவித்துள்ளார் வனிதா.
Listen News!