• Nov 19 2024

தலைகீழாக நின்று வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து வரும் வரலக்ஷ்மி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரான சரத்குமாரின் மகளாக இருந்து வருபவர் தான் வரலக்ஷ்மி. இவர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதனைத் தொடந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

கதாநாயகியாக மட்டுமல்லாது நெக்கட்டிவ் ரோலிலும் இவர் நடித்து வருகின்றார். அதிலும் தெலுங்கில் அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் வேற லெவலில் ஹிட் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பார்த்தீபன் நடிப்பில் உருவாகியுள்ள இரவின் நிழல் என்னும் படத்தில் நடித்திருக்கின்றார்.

இது தவிர சமந்தாவின் யசோதா, சபரி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் வரலக்‌ஷ்மி சரத்குமார். உடல் எடை அதிகரித்து இருக்கிறார் என கிண்டல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார்.

இந்த நிலையில் சுவற்றில் காலை வைத்து தலை கீழாக கவிழ்ந்தபடி கைகளை ஊன்றிய நிலையில், தனது கால்களை நன்றாக ஸ்ட்ரெட்ச் செய்து வரலக்‌ஷ்மி செய்துள்ள வெறித்தனமான உடற்பயிற்சியை பார்த்தாலே ரசிகர்களுக்கு ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்கிற மோடிவேஷன் ஏற்பட்டு விடும். அந்தளவுக்கு ஒரு வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement