• Sep 20 2024

வரலட்சுமி சரத்குமாருக்கு இப்படியொரு நோயா-அவரே வெளியிட்ட வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

போடா போடி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.இதனைத் தொடர்ந்து சர்கார் படத்தில் பவர்ஃபுல்லான வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு பெரிய மவுஸை பெற்றுக்கொடுத்தது.

இன்று, தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் என படு பிஸியாக இருக்கும் நடிகை வரலட்சுமி பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இவருடைய நடிப்பில் உருவாகி வரும் படங்கள் எல்லாம் விரைவில் வரிசையாக ரிலீசாக உள்ளன.இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகின்றார் வரலக்ஷ்மி

இந்நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக ஒரு வீடியோ பதிவின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

அதில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவரையும் முககவசம் அணியும்படி நடிகர்கள் வலியுறுத்த வேண்டும் ஏனென்றால் நடிகர்கள் ஆகிய நாம் படப்பிடிப்பின் போது முககவசம் அணிய முடியாது. சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் தயவு செய்து பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள், கவனமாக இருங்கள், முக கவசம் அணியுங்கள்" என்று வரலட்சுமி சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement