தமிழ் சினிமாவில் சுப்ரீம்ஸ்டார் என்று ரசிகர்களால் விருப்பமாக அழைக்கப்படும் நடிகர் தான் சரத்குமார்.மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்றுள்ள இவர் ஆரம்பத்தில் இவர் கதாநாயகனாக நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.
எப்போதும் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் இவர் தற்பொழுது விஜய்யின் வாரிசு படத்தில் இவர் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகின்றார்.அதே போல மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் .
இவருடைய மூத்த மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கு இரு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் கடந்த 14ம் திகதி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டவர். இதனால் சரத்குமாருக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் ஐதராபாத்தில் ஒரு ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அனைவரும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்து உடல்நலத்தை பாதுகாக்கவும் அவர் அந்த வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார். மகிழ்ச்சியை பகிரவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இன்றைய தினம் வாரிசு சூட்டிங்கில் கலந்து கொண்டதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ரித்திக் ரோஷன் கட்டாயம் இரண்டாவது திருமணம் செய்வார்- ஜோதிடர் சொன்ன ரகசியம் – மணப் பெண் யார் தெரியுமா?
- “ரூம் போட்டு யோசிப்பாங்களோ?- தன்னுடைய பாட்டை கிண்டல் செய்தவர்களுக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!