• Nov 19 2024

சர்பாட்டா பரம்பரை நடிகர் மீது காதல் வயப்பட்ட வரலட்சுமி- இந்த முறை திருமணம் கன்போம்- வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக இருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியினால் முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் தான் வரலட்சுமி. இவர் கதாநாயகியாக நடிப்பதை விட நெக்கட்டிவ் ரோ்களில் நடிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எல்லா மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில அவருக்கு புதிதாக காதல் ஒன்று துளிர்விட்டு இருக்கிறதாம். ஆம், நம்ம நாட்டாமையின் பொண்ணு தற்போது திருமணத்திற்கு ரெடியாகி கொண்டிருக்கிறார். விஜய் டிவி பிரபலம் ஒருவரை காதலித்து வரும் அவர் எப்போது வேண்டுமானாலும் தன் திருமண அறிவிப்பை வெளியிடலாம் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.


ஏற்கனவே விஷாலை உருகி உருகி காதலித்த வரலட்சுமி திடீரென அவரை பிரேக் அப் செய்தார். அதைத்தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவரின் மனதையும் ஒரு இளம் ஹீரோ மாற்றி இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தோஷ் பிரதாப் தானாம்.

சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் வரலட்சுமி உடன் இணைந்து கொன்றால் பாவம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அந்தப் பட சூட்டிங்கின் போது தான் இவர்கள் இருவருக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.


எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வது, அவுட்டிங் போவது என இருவரும் தங்கள் காதலை வளர்த்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஷூட்டிங் முடிந்து செல்லும் போது கூட காத்திருந்து அழைத்துச் செல்வது போன்ற சம்பவங்களும் நடந்து இருக்கிறது. இதனை படக்குழுவினரும் கண்டும் காணாதது போல் நோட் செய்திருக்கின்றனர். இப்படி நெருக்கம் காட்டி வரும் இந்த ஜோடியின் காதல் விவகாரம் தற்போது அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது.

மேலும் இது நிச்சயம் திருமணத்தில் முடியும் என்றும் கூறுகின்றனர். ஏனென்றால் தற்போது வரலட்சுமிக்கு 38 வயது ஆகிவிட்டது. அதனால் அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என்று சரத்குமார் ஆசைப்பட்டு வருகிறார். அந்த வகையில் விஷாலிடம் ஏமாந்தது போல் இல்லாமல் இந்த முறை வரலட்சுமி தெளிவாக முடிவெடுத்து திருமண பந்தத்தில் இணைவார் என அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















Advertisement

Advertisement