மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பகத் பாசில். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகின்றார். அதாவது தமிழில் வேலைக்காரன் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார்.
அந்தவகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு நடிப்பில் வெளியான 'மாமன்னன்' படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இதில் அவர் நடித்திருந்த ரத்னவேல் கதாபாத்திரம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்நிலையில் பகத் பாசில் இன்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'மாமன்னன்' பட இயக்குநர் மாரி செல்வராஜ்ஜூம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில் "வணக்கம் பகத் சார். உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.
மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஓங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்" என குறிப்பிட்டுள்ளார்.
வணக்கம் பகத் சார்!!!
உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில்… pic.twitter.com/PzF1HO2Myn
Listen News!