இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் 'வாரிசு'.தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் கட்டி உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். அவர் எந்தளவு இதில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்திருக்கிறார் என்பதை வாரிசு படத்தின் பாடல்களிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம் என நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் இயக்குநர் வம்சி.
இந்த நிலையில் இப்படத்திலிருந்து ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ வெளியாகியிருந்தது.இந்த வீடியோ வெளியாகி அரை மணி நேரத்துக்குள் 1 மில்லியன் வீவ்ஸ் பெற்று ஹிட்டடித்துள்ளது
Listen News!