• Nov 10 2024

வாரிசு படம் லாபமா, நஷ்டமா-வெளியானது முழு விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்துள்ளார்.இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகி வருகிறது.  இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது. 

 முதன்மை கதாபாத்திரங்களில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.அத்தோடு இப்படத்தில் இருந்து வெளிவந்த இரு பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அத்தோடு  மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் வியாபாரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் நாடு தியேட்டரிகள், கேரளா, கர்நாடகா, வெளிநாடு, டப்பிங் உரிமை என வாரிசு படத்தின் முழு வியாபாரம் குறித்து வாங்க பார்க்கலாம்..


வாரிசு வியாபாரம்

வாரிசு தமிழ் நாடு தியேட்டரிகள் உரிமை 7 ஸ்க்ரீன் நிறுவனம் - ரூ. 70 கோடி

கேரளா தியேட்டரிகள் உரிமை - ரூ. 6.5 கோடி

கர்நாடகா தியேட்டரிகள் உரிமை - ரூ. 8 கோடி

வெளிநாடு தியேட்டரிகள் உரிமை - ரூ. 35 கோடி

ஹிந்தி டப்பிங் உரிமை - ரூ. 34 கோடி

ஆடியோ உரிமை - ரூ. 10 கோடி

அமேசான் டிஜிட்டல் உரிமை - ரூ. 75 கோடி

சன் டிவி சாட்டிலைட் உரிமை - ரூ. 57 கோடி

மொத்தத்தில் வாரிசு படத்தின் முழு வியாபாரம் மட்டுமே - ரூ. 295.50 கோடி

படத்தின் பட்ஜெட் - ரூ. 260 கோடி

படம் வெளிவருவதற்கு முன் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ள லாபம் - ரூ. 35.50 கோடி   

இந்த கணக்கில் தெலுங்கானா மற்றும் ஆந்திரா உரிமை குறித்து பதிவு செய்யவில்லை. ஏனென்றால், அந்த பகுதிகளில் தயாரிப்பாளர் தில் ராஜு எந்த ஒரு விநியோகஸ்தர்களுக்கும் படத்தை விற்காமல், தானே வெளியிடுகிறார்.

மேலும் இந்த இரு இடங்களில் இருந்து தனக்கு ரூ. 50 கோடியாவது லாபமாக கிடைக்கும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு கணக்கு போட்டுள்ளாராம்.

ஆகையால் இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் பொழுது வாரிசு படத்தின் முழு வியாபாரம் ரூ. 345.50 கோடி இருக்கும் என தெரிகிறது. அத்தோடு ரூ. 85.50 கோடி வரை லாபம் கிடைக்கும் என கூறுகின்றனர்.   


Advertisement

Advertisement