ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த விஜய்யின் வாரிசு திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இயக்குநர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.
ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.மேலும் இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளனர். இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அத்தோடு தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அத்தோடு அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.அதே போல் நடிகர் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் அதிகாலை 1 மணி முதல் திரையிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்களிடம் கிடைத்து இருக்கும் ரெஸ்பான்ஸை பார்த்து தயாரிப்பாளர் தில் ராஜு மகிழ்ச்சியாகி உள்ளார். அவர் இன்று தியேட்டர்களில் ரசிகர்களின் ரெஸ்பான்ஸை நேரடியாக பார்க்க வந்தது குறிப்பிடத்தக்கது.இன்று மாலையே தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சி இருவரும் விஜய் வீட்டுக்கு சென்று சந்தித்து இருக்கிறார்கள்.
மேலும் அங்கு விஜய்க்கு பெரிய பூங்கொத்து கொடுத்து வாரிசு வெற்றிக்காக கொண்டாடி இருக்கின்றனர். புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது இதோ..
And the celebrations of #Varisu begin !!!#VarisuPongal #BlockbusterVarisu 🔥🔥🔥#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #VarisuPongal pic.twitter.com/Lci0piZYGF
Listen News!