• Sep 20 2024

நிச்சயதார்த்தம் முடிந்தவுடனேயே வெளிநாட்டுக்குப் பறந்த வருண் தேஜ் - லாவண்யா தம்பதியினர்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

காதல் பாடல்களையும், காதல் படங்களையும் நிறைய தந்துள்ள சினிமாவில் இருந்து அவ்வப்போது காதல் ஜோடிகளும் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ராதிகா - சரத்குமார், குஷ்பு - சுந்தர் சி, சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா, விக்னேஷ் சிவன் - நயன்தாரா, ஆதி - நிக்கி கல்ராணி என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. 

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு திரையுலகிலும் ரீல் ஜோடிகள், ரியல் ஜோடிகள் ஆன நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன.அந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைய உள்ள ஜோடி தான் வருண் தேஜ் - லாவண்யா . இவர்கள் இருவரும் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர், நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். 


இவர்கள் இவரும்  2 ஆண்டுகளுக்கு மேலாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவரும் பெற்றோர் சம்மத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.இவர்களில் நிச்சயதார்த்த விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


நிச்சயதார்த்த விழா முடிவடைந்ததைத் தொடர்ந்து இருவரும் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். இது குறித்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.அத்தோடு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement