'போடா போடி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இப்படத்தில் இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் முதல் படமே நல்ல வரவேற்பை இவருக்குப் பெற்றுக் கொடுத்ததால் தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வந்தார்.
இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வந்த வரலட்சுமி இடையில் உடல் எடையை கூட்டியதால் வாய்ப்பில்லாமல் சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து பின்னர் வில்லி ரோலில் பல படங்களில் நடித்து அசத்தி வருகின்றார்.
அதுமட்டுமல்லாது சமீபத்தில் உடற்பயிற்சி செய்து படுஒல்லியாக மாறியதோடு, கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றார். அந்தவகையில் தற்போதும் கடற்கரையில் கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதனைப் பார்த்த பிரபல நகைச்சுவை நடிகரான பிரேம்ஜி அமரன், கண்ணாடி அணிந்து வாயைப் பிளந்து பார்க்கும் ஸ்டிக்கர் ஒன்றினை பதிவு செய்து ஜொள்ளுவிட்டுள்ளார். இதற்கு பிரபல ஆடை வடிவமைப்பாளரும் பிரேம்ஜியின் உறவினர் தங்கையுமான வாசுகி பாஸ்கர் "அது உங்க தங்கச்சியின் தோழி, அப்படி பார்க்காதீங்க" என்று கமெண்டில் கலாய்த்திருக்கிறார்.
இதையெல்லாம் பார்த்த நம்ம நெட்டிசன்கள் சும்மா இருப்பாங்களா..? "43வயசிலும் உங்களுக்கு இது தேவைதானா" எனக் கேட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
#NewProfilePic pic.twitter.com/qNk8rzA26Q
She is your sister’s friend.
Don’t look.
Listen News!