சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. இந்த சீரியலானது அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
அதில் அஞ்சலிக்கு திடீரென ஒரு போன் கால் வருகின்றது. இதனையடுத்து பரபரப்புடன் ஓடிச் செல்கின்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த வேதநாயகம் அஞ்சலி எங்கே போவதாக பாட்டியிடம் கேட்கின்றார். அதற்கு அவர் "நான் எங்கேயும் ஓடிப் போய்ட மாட்டேன் என்று சொல்லிட்டுப் போறாள்" எனக் கூறுகின்றார். பதிலுக்கு வேதநாயகம் "நானும் அப்பிடித்தானே சொல்லிட்டு ஓடிப் போனேன்" எனக் கூறி டென்ஷானாக உள்ளார்.
மறுபுறம் அஞ்சலி ஹாஸ்ப்பிட்டலுக்கு விரைந்து செல்கின்றார். அங்கு நின்றவர்கள் "அவருக்கு ஆக்சிடண்ற் ஆகிவிட்டதாக தமக்கு போன் வந்ததாகவும், இங்கு வந்து பார்த்தால் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். இதனையடுத்து அஞ்சலி கண் கலங்கி அழுகின்றார்.
இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
Listen News!