• Nov 19 2024

வேதாவை தாறுமாறாக திட்டிய விக்ரம்... பதிலுக்கு வச்சு செய்த வேதா... பூரிப்பில் தாயார்.. சூப்பரான 'Modhalum Kaadhalum' Promo Video..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்  டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான்  'மோதலும் காதலும்'. ஏனைய சீரியல்களை போலவே இந்த சீரியலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் இருக்கிறது.


இந்நிலையில் இந்த சீரியலின் கதைப் பிரகாரம் விக்ரம்-வேதாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் வேதா விக்ரமிற்கு காஃபி ஊற்றிக் கொடுக்கின்றார். பதிலுக்கு விக்ரம் "உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்ல, இந்தத் தாலி கட்டினோன எல்லாம் ஓவராக என்னைக் கன்ரோல் பண்ணனும் என்று நினைக்காதே, தன்விக்காக மட்டும் நான் எதை வேணுமானாலும் செய்வேன்" எனக் கூறிச் செல்கின்றார். 


பின்னர் தன்வியின் பள்ளி சீருடைகள் கசங்கி கிடப்பதை பார்க்கும் வேதா அதை விக்ரமிடம் கொடுத்து அயர்ன் பண்ணி எடுத்து வருமாறு கூறுகிறார். ஆனால் விக்ரம் ஒழுங்காக அயர்ன் பண்ணாததால் உடனே வேதா "உங்களுக்கெல்லாம் எவன் கம்பெனியின் சிஇஓ பதவியை கொடுத்தான்" என்று கேட்டு விக்ரமைக் கலாய்க்கிறார். 


இதனைப் பார்த்த விக்ரமின் தாயார் தனது மகனை மருமகள் வேதா வேலை வாங்குவதை பார்க்க சந்தோசமாக இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement