• Sep 20 2024

ஆதி குணசேகரனாக அசத்தும் வேல ராமமூர்த்தி.. கோபத்தில் திட்டும் ஜனனி... ஈஸ்வரியை அண்ணனிடம் கோர்த்துவிட்ட கதிர்... சூடுபிடிக்கும் Ethirneechal - Promo..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்ற 'எதிர்நீச்சல்' சீரியலின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் புதிய ஆதிகுணசேகரனாக என்ட்ரி கொடுத்துள்ள ராம மூர்த்தியைப் பார்த்து ஜனனி "அடுத்தவங்களை பற்றி நீங்க கவலையே படுறதில்ல, எல்லாமே உங்களுக்கு நடக்கணும், நீங்க என்னைக்கு தான் மாற போறீங்களோ" எனக் கூறி சினக்கின்றார்.


மறுபுறம் விசாலாட்சி வீட்டு மருமகள்களிடம் "மூத்தவன் வந்திடுவான், அதுக்குள்ள அலங்காரம் பண்ணிட்டு வெளிய வாங்க" என்கிறார். பதிலுக்கு நந்தினி "எங்களை என்ன பொண்ணு பார்க்கவா வர்றாங்க" என்கிறார். 


மேலும் வண்டியில் வந்து கொண்டிருக்கும் குணசேகரனிடம் கதிர் "அன்றைக்கு எனக்கு என்ன நடந்திச்சு தெரியுமா, ஈஸ்வரி எனக்கு..." எனக் கூறி நடந்ததை சொல்கின்றார். இதனைக் கேட்டதும் குணசேகரன் கோபத்தின் உச்சிக்கு செல்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.


எனவே நடிகர் மாரிமுத்துவைப் போன்று ஆதி குணசேகரனாக வேல ராம மூர்த்தி அசத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

Advertisement

Advertisement