பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் 6 ஆவது சீசனானது தற்போது ஆரம்பமாகி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இது கிட்டத்தட்ட 3 வாரங்களை நிறைவு செய்ய இருக்கின்றது.
ஒவ்வொரு வாரமும் யார் வெளியேற போகிறார்கள். எந்த போட்டியாளர் யாரை நாமினேஷன் செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். ஏனெனில் நாமினேஷன் ரவுண்டில் தான் போட்டியாளர்களின் இன்னொரு முகம் தெரியும்.
இவர்களுக்கு இடையில் சண்டை, கோபம், அழுகை என அனைத்து விதமான உணர்ச்சிகளும் நாளுக்கு நாள் வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றது.
அதேபோன்று மறுபுறம் காதல் லீலைகளும், ரொமாண்டிக் பார்வைகளும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது ஒரு புறம் அசல் நிவாஷினி ஜோடியின் அலப்பறைகள் நடந்து முடிந்த நிலையில் மறுபுறம் ரொபேர்ட் மாஸ்டர் ரச்சிதாவின் காதல் பார்வைகளும் நீண்ட வண்ணம் தான் இருக்கின்றன.
அந்தவகையில் தற்போதும் ரொபேர்ட் மாஸ்டர் ரச்சிதா சமையல் செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து அவரை சைட் அடித்த வண்ணம் சோகமாக இருக்கின்றார். அதனைப் பார்த்த தனலட்சுமி உடனே " வேணாமப்பா வேணாம் இந்த பொண்ணுங்க காதலு.." எனப் பாடுகின்றார்.
அதற்கு ரச்சிதா "நீ மூடிட்டு போ, போய்ட்டு வேலையை பார்" என தனலட்சுமியை பார்த்துக் கூறுகின்றார். இது குறித்த அந்த வீடியோவினை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
#Rachita to #Dhana
Poye un Veliya paru🤣🤣#BiggBossTamil6 #BiggBoss#BiggBossTamil pic.twitter.com/OZwcgAOVKm
Listen News!