தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்’ திரைப்படத்தில் சிஎஸ்கே ரசிகராக ஒரு பிரபலம் நடிக்க இருப்பதாகவும் அந்த கேரக்டர் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாகவும் அதற்காக படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் ரஷ்ய படப்பிடிப்புடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் அதன் பிறகு தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வரும் நிலையில் சிறப்பு தோற்றத்திலும் த்ரிஷா உட்பட ஒரு சிலர் நடித்து வரும் நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி சிஎஸ்கே ரசிகராக ஒரு பிரபலம் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த பிரபலம் வெங்கட் பிரபு தான் என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒரு தகவல் ஆகும்.
சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த படப்பிடிப்பின் போது வெங்கட் பிரபு சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்டதாகவும் அவருடைய கேரக்டர் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வெங்கட் பிரபு ஏற்கனவே ’சரோஜா’ ’கோவா’ ’மங்காத்தா’ போன்ற படங்களில் சிறப்பு தோட்டத்திலும் சில படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் 'கோட்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!