• Sep 20 2024

இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே.. ‘கோட்’ படத்தின் வேற லெவல் ட்விஸ்ட்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இதுவரை இல்லாத ட்விஸ்ட் ஒன்று தெரியவந்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதாகவும் குறிப்பாக துருக்கியில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.


இந்த நிலையில் இந்த படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் இரண்டாம் பாகத்திற்கான லீட் வைக்க இயக்குனர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

பின்னாளில் மீண்டும் விஜய்யுடன் இணையும் சந்தர்ப்பம் கிடைத்தால்கோட் 2’ திரைப்படத்தை இயக்கலாம் என்பதால் தான் இந்த படத்தின் கிளைமாக்ஸில் ட்விஸ்ட் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.  இதுவரை வெளியாகாத இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாலும்கோட் 2’ திரைப்படம் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement