• Sep 20 2024

பிரபல ஹீரோவை கமிட் செய்த வெங்கட் பிரபு…அடுத்த பிளாக் பஸ்டர் படமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியான மங்காத்தா பிரியாணி மாநாடு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களியே பேராதரவைப் பெற்றிருக்கின்றது.

அதன்படி சிம்பு நடிப்பில் இவர் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

மேலும் அப்படத்தை தொடர்ந்து அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மதலீலை திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் கூற வேண்டும்.

இதனிடையே தற்போது நாக சைதன்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் அப்படத்திற்கான வேலைகள் ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்காக தன்னுடைய குழுவினருடன் ஹைதராபாத் சென்றுள்ளார் வெங்கட்பிரபு. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் ஒன்றுஉ கசிந்துள்ளது.

AGS நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தின் அறிவிப்பு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியே வெளியாகி இருக்க வேண்டியதாம். ஆனால் சில காரணங்களால் அந்த அறிவிப்பை படக்குழு தள்ளி வைத்துள்ளதாம் என குறிப்பிடப்படுகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement