• Sep 20 2024

ரோஹித் பற்றிய உண்மையை அறிந்து தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்த வெண்பா- அட்டகாசமான புரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல சின்னத்திரையான விஜய்டிவியில் இரவு நேரத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் பாரதிகண்ணம்மாவும் முக்கிய இடம் வகிக்கின்றது.

தற்பொழுது இந்த சீரியலில் வெண்பாவுக்கு ஜோடியாக நடிகர் சபரி அறிமுகமாகியுள்ளார். இதனால் வெண்பாவின் ஆட்டம் குறைவடைந்து விட்டதோடு சற்று சுவாரஸியம் குறைந்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.

மேலும் இந்த வாரம் பாரதி ஹேமா அடம் பிடித்ததால் கண்ணம்மாவை விவாகரத்து செய்யப்போவதில்லை என்பதை அறிவித்து விட்டார். இருப்பினும் எப்போது பாரதிக்கு அனைத்து உண்மையும் தெரிய வரும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில் அடுத்த வாரத்துக்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ரோஹித் பணக்காரன் இல்லை என்பதை வெண்பா அறிந்து கொள்கின்றார். இதனால் அடுத்து வெண்பா தனது ஆட்டத்தை ஆரம்பிப்பாரா ரசிகர்கள் அனைவரும் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement