• Sep 20 2024

பாரதி கண்ணம்மாவில் நடக்க இருக்கும் காட்சி குறித்து முதலே வீடியோ வெளியிட்ட வெண்பா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலை இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கி வருவதோடு கடந்த 2019ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீரியலில் கதாநாயகனாக அருண்பிரசாத் நடித்து வருவதோடு கதாநாயகியாக ரோஷினி நடித்திருந்தார். பின் ரோஷினி சில காரணங்களால் திடீரென வெளியேறிய நிலையில் அவருக்கு பதில் இன்னொருத்தர் நடித்து வரும் நிலையில் இதில் வில்லியாக வெண்பா காரெக்டரில் பரீனா நடித்து வருகின்றார்.

இந்நிலையில் பரீனா ஆசாத் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். அவர் மணக்கோலத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு பாரதி கண்ணம்மாவில் வரும் காட்சிக்காக. அது என்னவென்று கண்டுபிடியுங்கள் என தெரிவித்துள்ளார்.
அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் தெரிவித்திருப்பதாவது…

இல்லை பாரதியை தான் கட்டிக்கப் போகிறீர்களா?. இருந்தாலும் உங்க அலப்பறை தாங்க முடியவில்லை வெண்பா. கல்யாணமா இல்லை நிச்சயதார்த்தமா, நீங்களே சொல்லிடுங்க என தெரிவித்துள்ளனர்.

செம க்யூட்டாக இருக்கீங்க. அந்த மஞ்சள் கலரு சேலை உங்களுக்கு அம்சமாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கு தாய் என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து பாரதி அதாங்க அருண் பிரசாத் விலகுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு பதில் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் வெங்கட் பாரதியாக நடிக்கப் போகிறாராம்.

https://www.youtube.com/embed/ODDPlX3HEf4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

சினிமாவில் அறிமுகமாகும் சிவாஜிகணேசனின் பேரன்-வைரலாகும் புகைப்படம்..!

Advertisement

Advertisement