• Nov 10 2024

பழம்பெரும் நடிகை உடல்நலக்குறைவால் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மராத்தி சினிமா உலகின் தாய் என்று அழைக்கப்படுபவர் சுலோச்சனா லட்கர். 1946ம் ஆண்டு மராத்தி திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சுலோச்சனா. முதலில் மராத்தி மொழி படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், பின்னர் இந்தி திரையுலகிலும் தடம் பதிக்கத் தொடங்கினார். அதன்படி, இரண்டு மொழிகளிலும் சேர்த்து இதுவரை 300 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

திரையுலகில் சுலோச்சனா செய்த சாதனைகளை பாராட்டி அவருக்கு மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கப்பட்டது. அதேபோல், மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நடிகை சுலோச்சனா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வயது மூப்பு காரணமாக மூச்சு விடுவதில் அவருக்கு பிரச்சினை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுலோச்சனா நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.நடிகை சுலோச்சனாவின் இறுதிச் சடங்கு இன்று (ஜூன் 5) மாலை 5.30 மணிக்கு தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் நடிகை சுலோச்சனாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகை மாதூரி தீட்சித் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மராத்தி சினிமாவின் தாய் என்றழைக்கப்பட்ட சுலோச்சனா உயிரிழந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement