வெற்றிமாறன் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயக்கி வந்த திரைப்படம், 'விடுதலை'. இந்த படத்தின் மூலம் இதுவரை, காமெடி நடிகராக மட்டுமே நடித்து வந்த, சூரி... கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ளார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.
சூரி போலீசாக நடித்துள்ள இந்த படத்தில், விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்கிற போராளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் மூலம் ஹீரோயினாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ. நடித்துள்ளார்.
இப்படம் வெளியாகிய முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் நம்பப்படுகின்றது. மேலும் இப்படத்திற்காக பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தினைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியதாவது அரசு அதிகாரத் தின் ஒடுக்குமுறையை விடுதலை படத்தில் அங்குலம் அங்குலமாக விவரித்துள்ளதாக பாராட்டியுள்ளார்.
மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் நன்றாக விவரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன், மக்களை அமைப்பாக்குவதும், அரசியல்படுத்துவதும் இன்றியமையாத தேவை என்பதை வெற்றிமாறன் உணர்த்தியுள்ளதாக பாராட்டியுள்ளார்.
Listen News!