சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படம் சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை பின்னணியாகக் கொண்டு உருவாகிறது.இந்நிலையில், வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே இந்தப் படத்திற்காக லண்டன் சென்றுள்ளாராம் வெற்றிமாறன்.
விடுதலை 2 படப்பிடிப்பு முடிந்தவுடன் அதேநேரம், அடுத்து இயக்கவுள்ள வாடிவாசல் படத்தின் வேலைகளையும் வெற்றிமாறன் தொடங்கிவிட்டாராம். சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை பின்னணியாக வைத்தே இந்தப் படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். அதன்படி, ஜல்லிக்கட்டு, அதன் அரசியல் பின்னணி என பீரியட் ஜானரில் உருவாகிறது இந்தப் படம்.
கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் வாடிவாசல் பிரம்மாண்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்பதால், சூர்யா உட்பட மற்ற நடிகர்கள் காளைகளுடன் பயிற்சி எடுக்க மட்டுமே பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறதாம். மேலும், சில முக்கியமான காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்பட்டு எடுக்கப்படவுள்ளதாம்.
திரைப்படங்களில் விலங்குகள், பறவைகள் துன்புறுத்தபடக் கூடாது என்பதால், காளைகளை வைத்து சில காட்சிகளை எடுக்க முடியாது. இதனால் சில முக்கியமான காட்சிகளை VFX மூலம் எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். அதனால், இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக லண்டன் சென்றுள்ளாராம்.
படப்பிடிப்புக்கு முன்பே சில கிராபிக்ஸ் அவுட் ஸ்கெட்ச் ரெடி செய்து வருகிறாராம்.வாடிவாசல் கிராபிக்ஸ் காட்சிகளை அவதார் படத்திற்கு ஒர்க் செய்த ஒரு முன்னணி நிறுவனம் செய்து வருகிறதாம். இதனால் ஜல்லிக்கட்டு காட்சிகளில் காளைகள் ரியலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. பொதுவாக ஒருபடத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகே கிராபிக்ஸ் வேலைகள் நடக்கும். ஆனால், வாடிவாசல் படத்திற்காக இப்போதே VFX பணிகள் தொடங்கியுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே நார்வேயில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவிலும் இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்றுள்ளார். அதேபோல், கங்குவா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யா பிஸியாக காணப்படுகிறார். இந்தப் படத்தின் டீசர் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பிரம்மாண்டமான விழாவையும் படக்குழு ஏற்பாடு செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!