சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தில் ரஜினியுடன் சேர்ந்து அனிருத் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுவதாகவும் இந்த பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் வெளியானதில் இருந்து ரஜினி ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைப்பது மட்டுமின்றி அவ்வப்போது சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்பதும் குறிப்பாக பல திரைப்படங்களின் முன்னோட்ட வீடியோவில் நடித்து உள்ளார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ’வேட்டையன்’ படத்திற்கு ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகத்தான் ரஜினி மற்றும் அனிருத் ஆகிய இருவரும் டான்ஸ் ஆடிய காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த டான்ஸ் காட்சிகள் முன்னோட்ட வீடியோவில் மட்டும் தான் இடம் பெறும் என்றும் ’வேட்டையன்’ படத்தில் இருக்காது என்ற தகவல் தான் ரஜினி ரசிகர்களை சோகத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த டான்ஸ் காட்சி மட்டும் ’வேட்டையன்’ படத்திலும் இருந்தால் தியேட்டர்கள் தெறிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்றும் இந்த காட்சிகளை படத்திலும் இணைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் சம்பளம் இல்லாமல் 160 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாஸில், ரானா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகாசிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ஜிஎம் சுந்தர் உட்பட பலர் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை ஞானவேல் இயக்கி வருகிறார் என்பதும் எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!