• Sep 20 2024

’வேட்டையன்’ படத்தை முடிக்க போகும் ரஜினிகாந்த்.. ‘தலைவர் 172’ படப்பிடிப்பு தேதி இதுதான்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும்வேட்டையன்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 85 சதவீதம் முடிந்து விட்டதாகவும் இன்னும் பத்து அல்லது பதினைந்து நாட்களில் முழு படத்தின் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில நாட்களில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள்வேட்டையன்படத்தின் டப்பிங் உள்பட அனைத்து பணிகளையும் முடித்து விடும் ரஜினிகாந்த் அதன் பிறகு மே மாதம் முதல் வாரத்தில்தலைவர் 172’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தற்போதுதலைவர் 172’ படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை முழுமையாக முடிந்து விட்டதாகவும் இதனை அடுத்து நட்சத்திரங்கள் தேர்வு செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் மே முதல் வாரத்திற்குள் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் லாக் செய்யப்பட்டு விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜின் மற்ற படங்கள் போல் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இல்லாமல் செண்டிமெண்ட் மற்றும் குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்ட அழுத்தமான காட்சிகள் இருக்கும் என்றும் இந்த படம் ரஜினிகாந்த் படங்களில் வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகை மற்றும் பாலிவுட் நடிகர் ஒருவரிடம், பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement