• Sep 20 2024

வேட்டையன் ராஜா வருகிறார் பராக் பராக் பராக்... வெளியானது 'சந்திரமுகி-2' விலிருந்து லாரன்ஸின் மாஸ் போஸ்டர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் ரஜினி ஜோதிகா பிரபு வடிவேலு உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேல் ஓடி அபார சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.


ஆனால் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் இவருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் கங்கனா ராணவத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அத்தோடு இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கின்றார். 

இப்படமானது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாக இருப்பதனால் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சந்திரமுகி பாகம் ஒன்றைப் போலவே இரண்டாம் பாகமும் வெற்றி பெறுமா என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் தற்போது இப்படத்தில் ரஜினிக்கு பதிலாக வேட்டையன் ராஜாவாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸின் உடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இப்போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement