பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் ரன்வீர் கபூர். இவர் நடிப்பில் உருவாகி இன்றைய தினம் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் பிரம்மாஸ்திரா. இப்படத்தினை அயன் முகர்ஜி இயக்கியிருப்பதோடு இவரது மனைவியான ஆலியா பட் கதாநாயகியாக நடித்திருக்கின்றார்.
இப்படத்தில் அபிதாப் பச்சன், மௌனி ராய், நாகர்ஜுனா என இந்தியளவில் பிரபலமான பல நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள இப்படம் குறித்து சினிமா பிரமுகர்கள் தங்களுடைய விமர்சனங்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த விமர்சனத்தில் பிரம்மாஸ்திரா திரைப்படம் மிகப்பெரிய ஏமாற்றம். VFX நன்றாக இருக்கிறது. ஆனால், படத்தில் கதை என்று சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை.
இந்த வாய்ப்பை பிரம்மாஸ்திரா தவறவிட்டுள்ளது. மீண்டும் பாலிவுட் திரையுலகிற்கு தோல்வி படமாக பிரம்மாஸ்திரா அமைந்துள்ளது என்பது போல் ட்விட்டரில் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள்.இதனால் படக்குழு கடும் அதிர்ச்சியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!