• Sep 21 2024

பிரதீப்பை குழப்ப சொல்லும் விசித்ரா... வச்சி செய்ய திட்டம் போடும் புதிய போட்டியாளர்கள்... ஆரம்பமாகிறது புதியவர்கள் அட்டூழியம்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் நேற்றைய வைல்ட்காட் என்ட்ரியாக 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.


அதில் வைல்ட் காட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த எல்லோரையும் பூர்ணிமா ஸ்மோல் ஹவுஸிற்கு அனுப்புவதற்காக நாமினேஷன் செய்கின்றார். இதைப் பார்த்த அர்ச்சனா அப்போ எல்லாரும் பிளான் பண்ணித் தான் பண்ணுறீங்களா என்று கேட்க, பிளான் பண்ணித் தான் பண்ணுறோம் என்று சொல்ல வைல்ட்காட் என்ட்ரியாக நுழைந்தவர்களுக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது.


சிமால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா புதிதாக வந்த போட்டியாளர்களிடம் பிரதீப்பை குழப்பி விடுங்கள் என அறிவுரை கூறுகிறார். வெளியில் பார்த்து விட்டு வந்ததால் நீங்கள் வீக்காத்தான் இருக்குறீங்க என்று கூறுங்கள் அவன் குழம்பி விடுவான் என கூறுகிறார்.


இதற்கு போட்டியாளர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். அதில் தினேஷ் வெளியில் வேறமாதிரி இருக்கிறது. அதை இப்போது சொல்ல மாட்டேன். கமல் சார் சொல்ல சொல்லும் போது சொல்கிறேன் என குழப்பி விடுவோம் ஒரு வாரத்திற்கு மண்டையை பிய்த்துக்கொண்டு திரியட்டும் என கூறுகிறார். 


Advertisement

Advertisement