விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இரண்டாவது ஹனினை ஸ்பெயின் நாட்டில் கொண்டாடி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் சுதந்திர காதல் பறவைகளாகவே சுற்றிக்கொண்டு உள்ளனர்.
முதலில் ஹனிமூன் கொண்டாட தாய்லாந்திற்குச் சென்றனர். அங்கே எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தனர். அதனை அடுத்து நாடு திரும்பிய இவர்கள் இருவரும் கெரியரில் கவனம் செலுத்தி வந்தனர். தற்பொழுது அதிலிருந்து பிரேக் எடுத்து விட்டு ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர்.
அங்கு எடுத்துக்கொள்ளும் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ரசிகர்களுக்கு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது ஸ்பெயின் சாலையில் நின்றபடி... நயன்தாரா குட்டை டவுசரில், விக்னேஷ் சிவன் மீது சாய்ந்து, சாய்ந்து ரொமான்ஸ் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!