• Nov 19 2024

சர்ச்சில் நயனை கட்டிப்பிடித்து நச்சுனு முத்தம் கொடுத்த விக்கி- என்ன ஒரு ரொமான்ஸ்-தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 7 வருட காதலரான, விக்னேஷ் சிவனை நயன்தாரா இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், திருமணத்திற்கு பின்னர் மீண்டும் தன்னுடைய பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இவரை போலவே இவரது கணவர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில்  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முறையாக பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருகானுக்கு ஜோடியாக 'ஜவான்' படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.. இதில் 'ஜவான்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள விஜய்யின் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல் நயன்தாராவின் காதல் கணவர் விக்னேஷ் சிவன், சமீபத்தில் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து, தன்னுடைய பணியை சிறப்பாக செய்து முடித்த நிலையில், நயன்தாராவோடு இரண்டாவது ஹானிமூனுக்கு சென்றுள்ளார்.

தற்போது இந்த ஜோடி, ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில்அவ்வப்போது காதல் பொங்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஸ்பெயின் பார்சிலோனாவில் நயன் தாராவுடன், இந்திய கொடியை பிடித்து கொண்டாடியுள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இதன்பின் உலக புகழ் பெற்ற மிகவும் உயரமான கிறித்துவ சர்ச்சான Sagrada Família-விற்கு சென்றுள்ளனர். அங்கு நயன் தாராவிற்கு நெற்றியில் முத்தம் கொடுத்த வண்ணம் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.




Advertisement

Advertisement