• Sep 20 2024

நயன் சொன்ன அந்த விஷயத்திற்கு ஓகே சொன்ன விக்கி; என்ன விஷயம் அது?

tech / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்-விக்கி. இவர்கள் இருவரும் 'நானும் ரவுடி' தான் என்ற படத்தில் இணைந்து நடித்ததிலிருந்து சுமார் 07-ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 09-ஆம் திகதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திரக் ஹோட்டல் ஒன்றில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

திருமணத்தை தொடர்ந்து தாய் வீட்டு விருந்து, ஹனிமூன் என ஜாலியாக இருந்து வந்த இவர்கள் இருவரும் தற்போது தத்தமது பணிகளுக்கு திரும்பியிருக்கின்றனர். அதாவது நயன்தாரா தற்போது பிரபல இயக்குநர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் கிங்கான ஷாருக்கான் நடித்து வரும் 'ஜவான்' என்ற இந்தி பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதேபோன்று இயக்குநர் விக்னேஷ் சிவனும் தல அஜித்தை வைத்து ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்ற ஆசையில் பல நாட்களாக காத்திருந்து தற்போது AK62 என்ற படத்தை மும்முரமாக இயக்கி வருகின்றார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவே நடிக்கவிருக்கின்றார்.

இவ்வாறாக அஜித்தை வைத்து படத்தை இயக்க வேண்டும் என்ற தனது கனவு நனவாகி விட்ட சந்தோஷத்தில் இருக்கும் விக்னேஷ் சிவனுக்கு அவரது மனைவி ஒரு செய்தியைக் கூறியுள்ளார். அதாவது "கை நிறையப் படங்கள் வைத்திருப்பதால் தற்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாமே" என தனது கணவரிடம் கேட்டிருக்கின்றார். அதற்கு விக்னேஷ் சிவனும் மறுப்புத் தெரிவிக்காமல் "உன் விருப்பம் தான் என் விருப்பம் தங்கமே" என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட நயன்-விக்கி ரசிகர்கள் "அடடே கணவனும் மனைவியும் ரொம்ப பிஸி ஆகிட்டாங்க போல" என தத்தமது பாணியில் பதிலளித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement