• Sep 20 2024

திடீரென அந்த புகைப்படத்தை பகிர்ந்த விக்கி- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்ததோடு கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் மிகவும் பிரமாண்டாகத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கெண்டனர்.


அத்தோடு இருவரும் ஹனிமூன் கொண்டாட முதலில் தாய்லாந்துக்குச் சென்றிருந்தனர்.அதனை அடுத்து நாடு திரும்பிய இவர்கள் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தனர்.இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றனர்.


பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார்.


இவ்வாறு இருக்கையில் தற்போது விக்கி பார்சிலோனாவில் KissWall என சொல்லப்படும் இடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.அதைப் பார்த்த ரசிகர்கள் இப்படியொரு கிஸ்ஸா என பல்வேறு கெமண்ட்களை பதிவிட்டு வருவதோடு உனக்கென்னப்பா ஜொலியா இருக்கிறாய் எனவும் கூறி வருகிறார்கள்.




Advertisement

Advertisement