• Nov 19 2024

விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினரின் வீடியோ வடிவிலான திருமண அழைப்பிதழ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் நாளைய தினம் பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது.

திருமணத்தை மகாவலி புரத்தின் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் நடத்தவுள்ளனர். இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார்.

இவர்களது திருமணத்துக்காக கண்ணாடி மாளிகை போன்ற பிரமாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றதாம் திருமணத்துக்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளதாகவும், இந்த திருமணத்தை காட்சிப்படுத்தும் உரிமையை நெடபிளிக்ஸ் ஓடிடி தளம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளது.இதனை இயக்கும் பொறுப்பை இயக்குநர் கௌதம் மேனன் ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

https://twitter.com/Jeanpie77/status/1534204259100938242

இந்நிலையில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினரின் வீடியோ வடிவிலான திருமண அழைப்பிதழ் சமூகவலைத்தளங்களில் வேளியாகி வைரலாகி வருகின்றது. அதில் மணமக்கள் பெயர், இரு வீட்டார் பெற்றோர் பெயர் மற்றும் திருமணம் நடைபெறும் இடம் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement