பாலிவுட்டின் கிங் கான் ஆன நடிகர் ஷாருக்கான் பதான் படத்தைத் தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜவான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற அட்லீ, மூன்று ஆண்டுகளுக்கு மேல் அங்கே தான் வசித்து வருகிறார். மேலும் ஜவானில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகின்றார்.
இந்நிலையில், மும்பையில் இருந்து நேற்றிரவு சென்னை வந்த ஷாருக்கான், நயன்தாராவின் வீட்டுக்கு சர்ப்ரைஸ்ஸாக திடீர் விசிட் அடித்தார்.
அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் இரட்டை குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைகளை பார்ப்பதற்காகவே சென்னையில் உள்ள நயன்தாராவின் வீட்டுக்கு ஷாருக்கான் வந்துள்ளார்
நடிகர் ஷாருக்கான் வந்த செய்தி அந்தப் பிரதேசத்தில் காட்டுத் தீ போல பரவியதை அடுத்து,ரசிகர்கள் நயன்தாரா வீட்டுக்கு படையெடுத்து வந்து வாசலில் காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தைகளை பார்த்துவிட்டு வெளியே வந்த ஷாருக்கான் அங்கு திரண்டு இருந்த ரசிகர்களைப் பார்த்து தன்னுடைய கையை அசைத்தார்.
மேலும் ஷாருக்கானை வழியனுப்ப வந்த நயன்தாரா அவர் காரில் ஏறும்வரை காத்திருந்து அவருக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பி வைக்கின்றார். இது குறித்த வீடியோ ஆனது தற்போது வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
Scenes of #SRK from Chennai when he visited #Nayanthara last evening. 🖤✨@iamsrk @yrf #pathaan #ShahRukhKhan #jawan #Pathaan900crWorldwide #DeepikaPadukone #JohnAbraham pic.twitter.com/G2wlVW9YTY
— SRK Jawans (@SrkJawans) February 12, 2023
Listen News!