• Sep 20 2024

பாபாஜி குகையில் தியானத்தில் ரஜினி... தீயாய் பரவும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகப் பலராலும் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தனது திரைப்பயணத்தில் 49-ஆவது ஆண்டைக் கொண்டாடும் ரஜினி நடிப்பில் தற்போது 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி வசூலில் மாஸ் காட்டி வருகின்றது.


இந்நிலையில் தற்போது இமயமலை சென்றுள்ள ரஜினி தனது ஆன்மீக பயணத்தின் ஒரு பகுதியாக பாபாஜி குகைக்கு சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் மலையேறி சென்று, அங்கு தியானம் மேற்கொண்டார்.


அதாவது உத்தரகாண்ட்டின் குகுசீனா அருகேயுள்ள பாபாஜி குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


மேலும் இவர் செல்லும் வழியெங்கிலும் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினி தியானத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement