• Nov 17 2024

காதலியின் கணவரை அசிங்கப்படுத்திய சல்மான் கான்... அதுவும் பொது இடத்தில் வைத்து இப்படியா...? தீயாய் பரவும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் முக்கிய நட்சத்திர நடிகராகத்  திகழ்பவர் நடிகர் சல்மான்கான். இவரின் திரைப்படங்கள் எப்போதுமே வெற்றி திரைப்படங்கள் ஆகவே ரசிகர்களால் கணிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிசி கா பாய் கிசி கி ஜான் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். 


இதன் காரணமாக இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து தற்போது இவர் டைகர் 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக இவருடன் நடிகை கத்ரீனா கைப் நடிக்கிறார்.

ஏற்கெனவே சல்மான் கான் கத்ரீனாவை காதலித்தாக பல கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தன. இவர்களின் காதல் திருமணத்தில் முடியும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். 


இதனையடுத்து கத்ரீனா கைப் நடிகர் விக்கி கவுசலை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் விக்கி கவுசல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதே நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்றுள்ளார். அந்த சமயத்தில் விக்கி கவுசல் சல்மான் கானுடன் பேசமுயன்றார். ஆனால் சல்மான் கானோ கண்டும் காணாதது போல் சென்றுள்ளார். 

இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement