பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் தற்போது 'ஜவான்' திரைப்படம் உருவாகி வருகின்றது. அட்லீ இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் ஜூன் 2-ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஐபிஎல் தொடரின் 9-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக் கொண்டன. இதில் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியை ஷாருக்கான மற்றும் அவரது மகள் உஷா உதுப் ஆகியோர் நேரில் சென்று கண்டு களித்தனர். இந்த போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான் மைதானத்துக்குள் சென்று கொல்கத்தா வீரர்களை நேரில் சந்தித்து தன்னுடய மகிழ்ச்சியை தெரிவித்தார்.
இதன் பின்னர் இந்திய வீரர் விராட் கோலியையும் நேரில் சந்தித்து பேசினார். அதுமட்டுமல்லாது விராட் கோலியுடன் நடனமாடியதோடு அவரது கையிலும் ஷாருக்கான முத்தமிட்டார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
SRK and Virat Kohli doing Jhoome Jo Pathaan step together 😭😭❤️❤️ #KKRvRCBpic.twitter.com/53DZDjkM4v
Listen News!