பிரபல இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில், ரஜினி ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
அதாவது சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள ரஜினி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படம் பார்க்க திரையரங்குகளுக்கு படையெடுக்கின்றனர்.
அந்தவகையில் இயக்குநர் விஜய்யும் தனது குடும்பத்துடன் இணைந்து ஜெயிலர் படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் காரில் இருந்த அவரின் மூன்று வயது மகன் 'தலைவா' என மகிழ்ச்சியில் கூச்சலிட்டுக் கத்தியுள்ளார்.
இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Director #Vijay son 3 year old #Dhruvvaa after watching #Jailer #Rajinism forever 🙏 #ThalaivarNirandharam #Rajinified@rajinikanth @Nelsondilpkumar @sunpictures @anirudhofficial @iamvasanthravi @donechannel1 pic.twitter.com/AuGZXG9qdy
Listen News!